செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவண்ணாமலை அருகே 108 ஆம்புலன்சில் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வரப்பட்ட லாரி டிரைவர்

Published On 2020-04-25 10:23 GMT   |   Update On 2020-04-25 10:23 GMT
பரிசோதனைக்கு பின்னர் பர்கூரை சேர்ந்த டிரைவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருப்பவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தண்டாரம்பட்டு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருப்பதாகவும், அவர் மகராஷ்டிரா மாநிலத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்த சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்கு பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு 9 மணி அளவில் புறப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் 2 மணி அளவில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை சென்றடைந்தது.

அங்கு அந்த வாலிபரை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு சுகாதார துறையினரும், போலீசாரும் திரும்பி வந்து விட்டனர். மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த லாரி டிரைவர் இரவோடு இரவாக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News