செய்திகள்
மளிகை பொருட்கள்

மளிகை பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை பாயும்- எம்எல்ஏ எச்சரிக்கை

Published On 2020-04-23 11:44 GMT   |   Update On 2020-04-23 11:44 GMT
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மளிகை பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை பாயும் என்று எம்எல்ஏ கோவிந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி:

கொரோனா வைரஸ் தாக்குதலால் வேளை இன்றி ஊரடங்கில் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடியில் நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதிகளில் மளிகை பொருட்கள் கூடுதல் விலை யில் விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வருகின்றது.

அதுபோல் யாராவது கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தால் அந்த கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூடுதல் விலை விவரம் தெரியவந்தால் கடுமையான சட்டம் பாயும் என எச்சரித்தார்.

Tags:    

Similar News