செய்திகள்
சஸ்பெண்டு

கோவையில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

Published On 2020-04-23 11:21 GMT   |   Update On 2020-04-23 11:21 GMT
கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலைய ஏட்டுவை லஞ்ச புகார் தொடர்பாக சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை:

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தவர் சரவணன். இவர் கடந்த 18-ந் தேதி இரவு விசுவாசபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஊழியர் அலெக்சாண்டர் என்பவரின் மோட்டார் சைக்கிளை எடுத்து மறைத்து விட்டு, மறுநாள் அவரிடம் சென்று உங்கள் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருட முயன்றதாகவும், அவரிடம் தான் மீட்டு அதனை வைத்திருப்பதாகவும் கூறி அவரிடம் ஒப்படைத்தார். இதற்காக அலெக்சாண்டரிடம் இருந்து ரூ.1000 லஞ்சம் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா விசாரணை நடத்தி மாநகர கமி‌ஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரணன், தலைமை காவலர் சரவணணை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News