செய்திகள்
கைது

சூலூர் அருகே தண்ணீர் லாரியில் பதுக்கி மது விற்ற வாலிபர் கைது

Published On 2020-04-23 08:52 GMT   |   Update On 2020-04-23 08:52 GMT
கோவை மாட்டம் சூலூர் அருகே தண்ணீர் லாரியில் பதுக்கி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 96 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சூலூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் பலர் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

சூலூர் காங்கயம்பாளையம் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஒரு நபர் தண்ணீர் லாரியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 96 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News