செய்திகள்
ஏடிஎம்

முத்துப்பேட்டையில் 2 வாரமாக வங்கிகள், ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை- மக்கள் அவதி

Published On 2020-04-21 12:46 GMT   |   Update On 2020-04-21 12:46 GMT
கொரோனா தொற்று எதிரொலியாக முத்துப்பேட்டையில் 2 வாரமாக வங்கிகள், ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை. பணம் எடுக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் டெல்லி சென்று திரும்பிய 4 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கபட்டதால் அவர்கள் வசித்த பகுதி சுற்றிலும் அடைக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இப்பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டது. அதேபோல் அனைத்து ஏ.டி.எம்மையங்களும் மூடப்பட்டு இயங்கவில்லை. இதனால் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதில் முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உதயமார்த்தாண்டபுரம், சங்கேந்தி ஆகிய பகுதியில் வங்கிகள் இயங்கி வந்தாலும் போலீசாரின் கெடுபிடியால் மக்கள் அங்கே சென்று வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வாங்கவும், மருத்துவ செலவுக்கும் பணம் கையில் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News