என் மலர்

  நீங்கள் தேடியது "people suffering"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
  • அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி குளம் போன்ற முக்கிய நீர் நிலைகளில் வெகுவாக தண்ணீர் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவ சாயிகளும். நேற்று இரவு முதல் இன்று காலை வரை யில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

  இந்த கனமழையால் இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மரக்காணம் சன்னதி வீதி அம்பேத்கர் நகர் செல்லி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் இதுபோல் மரக்காணம் தாழங்காடு சாலையிலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது.
  • 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

  கள்ளக்குறிச்சி:

  தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. இதனால் தியாகதுருகம், பெரிய மாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனா ர்பாளையம், பழைய சிறுவங்கூர், சூளாங்குறி ச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பா ளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

  இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி மின் அளவு மற்றும் உணர்த்தி ஓர்வு அதிகாரிகள் விரைந்து வந்து மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதனை தொடர்ந்து இரவு சுமார் 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படாத மி ன்வெட்டால் தியாகதுருகம் பகுதி பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் விடிய விடிய கனமழையால் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் சூழ்ந்தது.
  • சகதி காடான வீதிகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.  மதுரையில் பெய்த மழையால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

  மதுரை

  மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

  தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

  மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க் டவுன், ஒத்தக்கடை, ஊமச்சிக்குளம், அய்யர்பங்களா, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழை தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் தண்ணீர் தேங்கி சகதிகாடாக உள்ளதால் மக்கள் நடக்க கூட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

  மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

  சிட்டம்பட்டி -13, கள்ளந்திரி -10, தனியா மங்கலம்- 14, மேலூர் -8, சாத்தையாறு அணை- 9, வாடிப்பட்டி -22, உசிலம்பட்டி -5, மதுரை வடக்கு -21, தல்லாகுளம் -19, விரகனூர் -7, விமான நிலையம் -8, இடைய பட்டி -40, புலிப்பட்டி -40, சோழவந்தான் -11, மேட்டுப்பட்டி -19, பேரையூர்- 45, ஆண்டிப்பட்டி -29.

  மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29.9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 763கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1759 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள்அவதிப்படுகின்றனர்.
  • இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


     மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் செல்லும் வழியில் உள்ளது சாத்தமங்கலம். இந்த கிராமத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

  இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் மற்றும் விஷ பூச்சிகள் புகுந்து விடும் என்ற பயத்தில் உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

  தேங்கிய மழை நீரால் கொசுதொந்தரவும் அதிகமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தேங்கிய மழைநீரை கடந்து செல்லும் போது சிரமத்துக்கு உள்ளாவதாகவும் கூறினர்.

  இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

  அடிக்கடி மழை பெய்யும் போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடியவும் நீண்ட நாட்கள் ஆகிவிடுகிறது. தற்போது தொடர்மழையினால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

  இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் ஊரை விட்டு காலி செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
  திருக்கனூர்:

  புதுவையில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

  காலை 9 மணிக்கே வெயில் தாக்கம் தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் உக்கிரம் அதிகரித்தபடியே உள்ளது. இதனால் பகல் வேளையில் வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.

  இதற்கிடையே கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் புதுவையில் மழை பெய்யவில்லை. இதனால் இரவு வேளையில் ஏழை மக்கள் மற்றும் நடுத்தரமக்கள் புழுக்கத்தினால் அவதி அடைந்து வருகின்றனர்.

  இந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

  மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசினாலும் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். திருக்கனூர் கடை வீதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

  திருக்கனூர் பகுதியில் பலத்த மழை கொட்டிய நிலையில் புதுவை நகர பகுதியில் சிறிய தூறல் மழை மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

  இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூலிங்கிளாஸ் அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 

  பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் இந்த வெயிலை சமாளிக்க முடியவில்லை. அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் மே மாதம் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தரடாப்பட்டு காலனியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  தண்டராம்பட்டு:

  தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு கிராம காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த காலனியில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டப்பட்டது. அதன் பின்பு இங்கு வாழும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

  கடந்த 1996-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

  குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இனி இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஆனால் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, கால்வாய் வசதி போன்றவை ஏதும் செய்யப்படவில்லை.

  தரடாப்பட்டு காலனிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தரடாப்பட்டை சுற்றியுள்ள கண்ணகந்தல், நெடுங்காவாடி, கீழ்வணக்கம்பாடி, கரிப்பூர், கொழுந்தம்பட்டு ஆகிய கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக தரடாப்பட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் மருத்துவமனை சரிவர செயல்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவமனை சரிவர இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  ×