என் மலர்
உலகம்

நாடு முழுவதும் மின்தடை: இலங்கை இருளில் மூழ்கியது
- மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
- பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கொழும்பு:
இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
Next Story