தியாகதுருகம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.
தியாகதுருகம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. இதனால் தியாகதுருகம், பெரிய மாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனா ர்பாளையம், பழைய சிறுவங்கூர், சூளாங்குறி ச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பா ளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி மின் அளவு மற்றும் உணர்த்தி ஓர்வு அதிகாரிகள் விரைந்து வந்து மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதனை தொடர்ந்து இரவு சுமார் 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படாத மி ன்வெட்டால் தியாகதுருகம் பகுதி பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com