செய்திகள்
கோப்புபடம்

முள்ளம்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

Published On 2020-04-07 08:32 GMT   |   Update On 2020-04-07 08:32 GMT
வால்பாறையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வால்பாறை:

வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரும் களஇயக்குனருமான தெபாஹீஷ்ஜானா மற்றும் துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் பருவமழைக்கால சிறப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாய்முடி எஸ்டேட் பகுதியில் 3 பேர் முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கெஜமுடி எஸ்டேட் கீழ் பிரிவு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(56), சிவா (36), கண்ணன்(53) என்பதும் கன்னிவைத்து முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் வேட்டைத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News