செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 26 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-04-02 16:00 GMT   |   Update On 2020-04-02 16:00 GMT
தமிழகத்தில் இதுவரை 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் 57, 110, 75 உயர்ந்துள்ளது. இன்றுடன் 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 264 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

1. சென்னை - 46
2. ஈரோடு - 32
3. திருநெல்வேலி - 30
4. கோவை - 29
5. தேனி - 20
6. நாமக்கல் - 18
7. செங்கல்பட்டு - 18
8. திண்டுக்கல் - 17
9. கரூர் - 17
10. மதுரை - 15
11. திருப்பத்தூர் - 10
12. விருதுநகர் - 10
13. திருவாரூர் - 07
14. சேலம் - 06
15. ராணிப்பேட்டை - 05
16. கன்னியாகுமரி - 05
17. சிவகங்கை - 05
18. தூத்துக்குடி - 05
19. விழுப்புரம் - 03
20. காஞ்சிபுரம் - 03
21. திருவண்ணாமலை - 02
22. ராமநாதபுரம் - 02
23. திருவள்ளூர் - 01
24. வேலூர் - 01
25. தஞ்சாவூர் - 01
26. திருப்பூர் - 01
Tags:    

Similar News