செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 35 பேர் கண்காணிப்பு

Published On 2020-04-02 09:11 GMT   |   Update On 2020-04-02 09:11 GMT
டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் பங்கேற்றது தெரியவந்துள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து மாநாட்டில் பங்கேற்ற 16 பேர், ஆரணியில் இருந்து பங்கேற்ற 7 பேர், மங்கலம் பகுதியில் இருந்து பங்கேற்ற 7 பேர், சந்தவாசல் பகுதியில் இருந்து பங்கேற்ற 3 பேர், ஆவூர் கிராமத்தை சேர்ந்த 2 பேர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆவூரை சேர்ந்த 2 பேருக்கும் சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. இருந்த போதிலும் அவர்கள் 28 நாட்கள் வீடுகளில் தனித்திருக்க வேண்டும். வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தி அவளது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அருகிலுள்ள 10 வீடுகளிலும் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீதமுள்ள 33 பேர்களில் 23 பேர் செய்யாறு அரசு மருத்துவமனையிலும், 10 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News