செய்திகள்
அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சிகளில் வரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

Published On 2020-03-31 05:21 GMT   |   Update On 2020-03-31 05:21 GMT
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் செலுத்த ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள், சாலையோரத்தில் இருப்பவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்கள் என 16 ஆயிரம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வருகிற ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அங்குள்ள மந்திரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல் கோவை மாவட்டத்தில் வடமாநில மாணவர்கள் தங்கியிருப்பதாக முதல்-அமைச்சருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. அந்த தகவல் வந்தவுடன் உடனடியாக அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுபவர்களுக்கு அதை உடனடியாக கொடுத்து உதவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News