செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2 கோடி நிதியுதவி வழங்கினார் தமிழக ஆளுநர்

Published On 2020-03-30 09:46 GMT   |   Update On 2020-03-30 09:46 GMT
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலா ரூ.1 கோடி நிதியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சென்னை:

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதிஉதவிகளை மக்கள் வழங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் நிவாரண பணிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலா ரூ.1 கோடி நிதியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் வழங்கினார்

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதேபோல் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து டி.டி.வி.தினகரன் ரூ.1 கோடி வழங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.10 லட்சத்தை மதுரை ஆட்சியரிடம் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் ரூ.50 லட்சம் நிதி அளித்தனர்.
Tags:    

Similar News