செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மும்முரம்

Published On 2020-03-24 13:03 GMT   |   Update On 2020-03-24 13:03 GMT
தஞ்சையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களை கொண்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ள 20 நபர்கள் இம்மாநகராட்சி பொதுசுகாதாரபிரிவு சிறப்பு குழு மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளதா? என நேராய்வு செய்யப்பட்டு மற்றும் தொடர்ந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விசாரித்த வகையில் மேற்படி நபர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை கண்டு அறியப்பட்டது. அவர்கள் மாநகராட்சியில் சுகாதார பிரிவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி உட்புறம் மற்றும் திலகர் திடல் ஆகிய இருவேறு உணவகத்தில் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டு பொதுமக்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கியுள்ள உட்புற நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்றவர்கள் 16 பேர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட புதிய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், ரெயில் நிலையம், அம்மா உணவகங்கள், நீதிமன்ற வளாகம், பெட்ரோல் பங்குகள், மாநகராட்சி அலுவலகம், போலீஸ் நிலையங்கள் மற்றும் அனைத்து நகர்புற ஆரம்ப சுகதார நிலையங்கள் ஆகியவை கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களை கொண்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளில் எந்திரங்களை கொண்டு கிருமி நாசினி முழுவதுமாக தெளிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியால் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கட்டுப்பாட்டு அறை சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவை கொண்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
Tags:    

Similar News