செய்திகள்
தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- தொழிலாளி பலி

Published On 2020-03-23 08:31 GMT   |   Update On 2020-03-23 08:31 GMT
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

சிவகாசி வி.சொக்கலிங்காபுரம் பகுதியில் நவரத்தினா பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. சிவகாசியைச் சேர்ந்த மோகன் இதனை நடத்தி வருகிறார்.

நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற்று இந்த பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 40 அறைகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.

இன்று காலை தொழிலாளர்கள் பணிக்கு வந்து பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 11 மணிக்கு பேன்சி ரக பட்டாசு மருந்து ஒரு அறையில் தயாரிக்கப்பட்டது. இந்த பணியில் 3 பேர் ஈடுபட்டனர்.

அவர்களில் 2 பேர் வெளியே சென்ற நிலையில் சாத்தூர் சிவந்திபட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (48) மட்டும் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து நாசமானது.

வெடி விபத்து நடந்ததும் மற்ற அறைகளில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் வகையில் தடுத்தனர்.

இந்த விபத்தில் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News