செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்.

கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-03-20 14:58 GMT   |   Update On 2020-03-20 14:58 GMT
சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களாக 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் துப்புரவு, பாதுகாப்பு, எலக்ட்ரிக்கல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த மார்ச் மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த மாதச் சம்பளம் இன்று வரை வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி ஒப்பந்த பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர், காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. 

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதில் மாலைக்குள் சம்பளம் வங்கிக் கணக்கில் ஏறி விடும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியினை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறினர். ஒப்பந்த தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News