செய்திகள்
கொரோனா வைரஸ்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்கள்

Published On 2020-03-20 10:28 GMT   |   Update On 2020-03-20 10:28 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
திண்டுக்கல்:

நத்தம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்தவர்கள், டிரைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் கணவாய் பட்டி ஊராட்சி மன்றம் சார்பாக 8-வது வார்டு உறுப்பினர் நாகூர் அனீபா தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் மைவீரர் அப்துல்லா, நகர தலைவர் சேக் அப்துல்லா, நகர செயலாளர் சேக் முகமது இமாம், ரபியுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வத்தலக்குண்டு யூனியன் சேர்மன் பரமேஸ்வரி முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, சுகாதார ஆய்வாளர் அகமது ரிவாய் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் கொரோனா தொடர்பாக விளக்கினார்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லிசெட்டிபட்டி ஊராட்சி கு.பறைபட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தலைவர் வைகை பாலன், முக கவசம் அணிந்தபடி விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பள்ளிகள், அங்கன்வாடி மையம், கோவில்கள் தெருக்களில் தூய்மை பணியாளர்கள் மூலமாக துப்புரவு பணிகள் நடைபெற்றன.

வத்தலக்குண்டு கிளை நூலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சித்தமருத்துவர் பாலமுருகன், தலைமை தாங்கி சித்தமருத்துவ முறைப்படி படிகாரக்கல் கொண்டு தண்ணீரில் கைகழுவும் முறை குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சிக்கு நூலகர் கருப்பையா, சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், வாசகர் வட்ட தலைவர் தங்கபாண்டி, சமூக ஆர்வலர் ரபீக் அகமது, முகமது ஆரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News