செய்திகள்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-03-13 18:17 GMT   |   Update On 2020-03-13 18:17 GMT
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்:

கரூர் மண்டலம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட செயலாளர் ராஜதுரை, மாவட்ட தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பணிநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்கி பணிப்பதிவேடு மற்றும் பணிவிதிகள் உருவாக்கப்பட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறையற்ற ஆய்வுகள், பணியாளர் விரோத போக்குகள், முறையற்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் ஏ.பி.சி. சுழற்சிமுறை பொது பணியிட மாறுதல்களை உடனடியாக பணிமூப்பு அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் உபரி பணியாளர்களை டாஸ்மாக் நிறுவனத்திலும், அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங் களில் உள்ள காலிப்பணி யிடங்களான இளநிலை உதவியாளர், பதிவுருஎழுத்தர், காவலர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களில் பணிமூப்பு வரிசைப்படியும், இட ஒதுக்கீட்டின் அடிப்படை யிலும் நிரப்பிட வேண்டும்.

வழிப்பறி கொள்ளையர் களால் தாக்குதல் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பணியாளருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். மதுபான நிர்வாகத்தில் பார் ஒப்பந்ததாரர்கள் தலையிடாதபடி தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட டாஸ்மாக் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News