செய்திகள்
தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சவரனுக்கு 1096 ரூபாய் குறைந்தது- ஒரு கிராம் ரூ.4020

Published On 2020-03-13 06:06 GMT   |   Update On 2020-03-13 06:06 GMT
கடந்த வாரம் உச்சத்தில் இருந்த தங்கம் விலை தற்போது குறையத் தொடங்கி உள்ளது. இன்று சவரனுக்கு 1096 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை:

உலகம் முழுவதும் பரவி உயிர்ப்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் வர்த்தகத்தை பாதித்து வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. 

கடந்த வாரம் உச்சத்தில் இருந்த தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ. 33 ஆயிரத்து 256-க்கும், ஒரு கிராம் ரூ. 4,157-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தின்போது தங்கம் விலை மேலும் சரிவடைந்தது. ஒரு சவரனுக்கு ரூ.1096 குறைந்து, ரூ.32 ஆயிரத்து 160க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.4020 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.4221 ஆக உள்ளது.

வெள்ளி விலை கிலோவுக்கு 3000 ரூபாய்  குறைந்து ஒரு கிலோ 45 ஆயிரத்து 900 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் 45 ரூபாய் 90 காசுகளாக உள்ளது.
Tags:    

Similar News