செய்திகள்
கோப்பு படம்

கழுகுமலை பேரூராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2020-03-07 16:56 GMT   |   Update On 2020-03-07 16:56 GMT
கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சட்ட விரோதமாக பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கழுகுமலை:

கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமையில் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கழுகுமலை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி கடைகள், பெட்டிகடைகள், கறிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு சென்று தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதில் சட்ட விரோதமாக கேரி பேக்குகள் பயன்படுத்தி வந்த சில கடைகளுக்கு அபராத தொகையாக ரூ.2400 வீதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் இதேபோல் தொடர்ந்து கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளுக்கு கூடுதலாக அபராத தொகை மற்றும் அவர்களின் கடை லைசென்சும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து கழுகுமலை மேலபஜார் பகுதி, சங்கரன்கோவில் ரோடு, தெற்கு ரதவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
Tags:    

Similar News