செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

கெலமங்கலம் அருகே சிறுமியின் இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Published On 2020-02-26 05:47 GMT   |   Update On 2020-02-26 05:47 GMT
கெலமங்கலம் அருகே இன்று நடக்க இருந்த சிறுமியின் இளம் வயது திருமணத்தை அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஜி.பி. பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கும், உத்தனப்பள்ளி அருகே பென்னிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் இல்லேஷ் என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக உத்தனப் பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து உத்தனப்பள்ளி போலீசார், சூளகிரி தாசில்தார் ரெஜினா, வருவாய் ஆய்வாளர் செந்தில், சானமாவு கிராம நிர்வாக அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் திருமணம் நடைபெறுவதாக இருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறுமியை மீட்டு குழந்தைகள் நலகாப்பக அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் இளம்வயது திருமணம் குறித்து ஆலோசனை வழங்கினர். போலீசார் உறவினர்களை சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்த சூழ்நிலையில் ஏராளமான உறவினர்கள் அங்கு திரண்டனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் திருமணம் நடைபெறாமல் நின்றதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது.

Tags:    

Similar News