செய்திகள்
ஆர்ப்பாட்டம்

திருச்சியில் சித்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-25 12:33 GMT   |   Update On 2020-02-25 12:33 GMT
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி:

ஒருங்கிணைந்த மரபு வழி சித்த மருத்துவ நலச்சங்கம் சார்பாக இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செயல் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். சந்திரசேகர் ,செல்வகுமார், முகேஷ்,பழனிச்சாமி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 17 சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்கள் மூலிகை செடிகளை தங்கள் கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பரம்பரை மருத்துவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும், தனித் துறையை ஏற்படுத்தவேண்டும். பரம்பரை மருத்துவர்களை கொண்டு நல்வாழ்வு மையங்கள் துவங்க வேண்டும். போலி மருத்துவர்கள் இல்லை என்று அரசு ஆணை வழங்கவேண்டும். போலி மருத்துவர்களை அரசு மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பல மருத்துவர்களை கொண்டு மருத்துவ கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பேரிடர் காலங்களில் உதவிடும் வகையில் தாலுகா அளவில் பரம்பரை மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News