செய்திகள்
கோப்பு படம்

காலாப்பட்டில் போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்

Published On 2020-02-25 09:40 GMT   |   Update On 2020-02-25 09:40 GMT
ஆட்டோ டிரைவர்களை அவமதிப்பு செய்வதாக கூறி போலீசாரை கண்டித்து காலாப்பட்டில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதராப்பட்டு:

காலாப்பட்டு போலீஸ் நிலையம் எதிரே சிங்கார வேலர் ஆட்டோ ஸ்டேண்டு இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஸ்டேண்டில் 25-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த ஆட்டோ ஸ்டோண்டில் ஆட்டோ ஓட்டி வந்த காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த குமார் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அவரை ஒரு போலீஸ்காரர் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை காவல்துறையின் மேலிடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மற்றொரு ஆட்டோ டிரைவரான அன்பு என்பவரை காலாப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக உட்கார வைத்துள்ளனர்.

மேலும் ஒரு போலீஸ்காரர் அன்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

தொடர்ந்து போலீசார் ஆட்டோ டிரைவர்களை அவமதிப்பு செய்வதாக கூறியும் போலீசாரை கண்டித்தும் காலாப்பட்டில் ஆட்டோ டிரைவர்கள் ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

கடுமையான வெய்யிலிலும் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டேண்டு முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News