செய்திகள்
ஆவின் டேங்கர் லாரிகள்

ஆவின் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

Published On 2020-02-18 06:46 GMT   |   Update On 2020-02-18 09:36 GMT
3 நாட்களாக நடந்த ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்களின் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை:

ஆவின் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது . மாநிலம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது.

பால் சப்ளை செய்வதற்காக 2 ஆண்டுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும் புதிய ஒப்பந்தம் போடவில்லை.

பழைய வாடகை ஒப்பந்தத்தில் லாரிகள் இயக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திப்பதாகவும், மறு டெண்டர் மூலம் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் கூறி கடந்த 14-ந்தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

கடந்த 3 நாட்களாக நடந்த போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளையை அதிகாரிகள் சமாளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆவின் டேங்கர் லாரிகள் வழக்கம் போல் ஓடத் தொடங்கி உள்ளன. இதனால் இனி ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.

Tags:    

Similar News