செய்திகள்
பேரணாம்பட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்பினர்.

ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு, வாணியம்பாடியில் முஸ்லிம்கள் போராட்டம்

Published On 2020-02-17 11:32 GMT   |   Update On 2020-02-17 11:32 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு, வாணியம்பாடியில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடையில் ராணிப்பேட்டை சர் ஜமாத் சார்பில் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, விஷாரம், கல்மேல்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

பேரணாம்பட்டு நான்குகம்பம் பகுதியில் பேரணாம்பட்டு அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

வாணியம்பாடி ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களின் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று இதுவரை 30 ஆயிரம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளதாகவும், நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள், கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News