செய்திகள்
கோப்புப்படம்

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: கோவை மாவட்டத்தில் 29,91,923 வாக்காளர்கள்

Published On 2020-02-14 11:04 GMT   |   Update On 2020-02-14 11:04 GMT
கோவை மாவட்டத்தில் மொத்தம் 29,91,923 வாக்காளர்கள் உள்ளதாக இன்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு:-

மேட்டுப்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 766 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 597 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 36 பேர் என மொத்தமாக 2 லட்சத்து 89 ஆயிரத்து 395 வாக்காளர்கள் உள்ளனர்.

சூலூர் தொகுதியில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 251 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 57 ஆயிரத்து 327 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தமாக 3 லட்சத்து 9 ஆயிரத்து 606 வாக்காளர்களும் உள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 22 ஆயிரத்து 804 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 22 ஆயிரத்து 764 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 83 பேர் என மொத்தம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 844 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 62 ஆயிரத்து 554 பெண் வாக்காளர்கள், 33 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 431 வாக்காளர்கள் உள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 635 பேரும், பெண் வாக்காளர் 1 லட்சத்து 59 ஆயிரத்து 305 பேரும், 76 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 16 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 783 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 590 வாக்காளர்கள் உள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 759 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 112 பேரும், 22 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 893 வாக்காளர்கள் உள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 232 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 57 ஆயிரத்து 521 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரத்து 787 வாக்காளர்கள் உள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 575 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 593 வாக்காளர்களும் உள்ளனர்.

வால்பாறை தொகுதியில் 98 ஆயிரத்து 137 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 806 வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் 14 லட்சத்து 79 ஆயிரத்து 786 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 11 ஆயிரத்து 767 பெண் வாக்காளர்களும், 370 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 31 ஆயிரத்து 981 பேர் அதிகமாக உள்ளனர்.18-19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 23 ஆயிரத்து 878 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News