செய்திகள்
கும்பாரக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை படத்தில் காணலாம்.

அட்டகாசம் செய்த 25 யானைகள் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன

Published On 2020-02-12 18:12 GMT   |   Update On 2020-02-12 18:12 GMT
தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 25 யானைகளை வனப்பகுதிக்கு வன ஊழியர்கள் விரட்டினார்கள்.
தேன்கனிக்கோட்டை:

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்துள்ள இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களையொட்டி முகாமிட்டிருந்த 25 யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர்கள் சீதாராமன் (தேன்கனிக்கோட்டை), முருகேசன் (தளி), ரவி (அஞ்செட்டி), வனவர் கதிரவன் மற்றும் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களையொட்டி முகாமிட்டிருந்த 25 யானைகளை மலசோனை, தாவரக்கரை, கெண்டிகானப்பள்ளி, பள்ளப்பள்ளி, அகலகோட்டை, ஜவளகிரி வழியாக கும்பார கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள்.

முன்னதாக பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகள் விரட்டப்பட்டன. தற்போது யானைகள் கும்பாரக்கோட்டை வனப் பகுதியில் உள்ளதால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News