செய்திகள்
கைது

எழும்பூர் தொழில் அதிபர் வீட்டில் 72 பவுன் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

Published On 2020-02-11 09:03 GMT   |   Update On 2020-02-11 09:03 GMT
சென்னை எழும்பூரில் தொழில் அதிபர் வீட்டில் 72 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் திருச்செந்தூரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை எழும்பூர் காஜா மேஜர் சாலையில் வசித்து வருபவர் தொழில் அதிபர் கல்யாண்குமார் (வயது 40). இவர் கடந்த 5-ந் தேதி எழும்பூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

வீட்டில் வயதான பெற்றோர் உள்ளனர். அவர்களை பார்த்து கொள்ள ஷாலினி என்ற பெண்ணையும், லோக் நாயகி என்பவரையும் 5 வருடங்களுக்கு முன்பு வேலையில் சேர்த்திருந்தோம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த பெண் வேலைக்கு வரவில்லை. வீட்டில் இருந்த பணம் மற்றும் 75 பவுன் நகை காணாமல் போய் உள்ளது என்று கூறி இருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண் ஷாலினியை கைது செய்து விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஷாலினியை சிறையில் அடைத்தனர்.

அவரிடம் இருந்து டைட்டன் வாச், முறுக்கு செயின், தங்க அரைஞாண் கயிறு, பெல் டிசைன் செயின், பூதோடு, காசு வளையம், தங்க செயின், மோதிரங்கள், தங்க காப்பு, வளையல், செயின் கொக்கி, மைனர் செயின், மோதிரங்கள், கம்மல், தங்க சிலுவை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த லோகநாயகி, பிரவீனா, அமரேசன், கலெக்டர் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் ஆகியோர் திருச்செந்தூர் அருகில் உள்ள மணப்பாட்டில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News