செய்திகள்
கைது

அமைச்சர் ஆதரவாளர் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேர் கைது

Published On 2020-02-07 12:25 GMT   |   Update On 2020-02-07 12:25 GMT
கிருமாம்பாக்கம் அருகே அமைச்சர் ஆதரவாளர் கொலையில் பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்தனர்.

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 36). காங்கிரஸ் பிரமுகரான இவர், அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

கடந்த 31-ந்தேதி சாம்பசிவம் தனது தங்கை திருமண நிகழ்ச்சிக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க கிருமாம்பாக்கத்தில் காரில் வந்த போது அவரை ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட சாம்பசிவம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வீரப்பனுக்கு மைத்துனர் என்பதும், வீரப்பன் கொலை வழக்கில் சாம்பசிவம் முக்கிய சாட்சியாக இருந்ததால் எதிராளிகள் சாம்பசிவத்தை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அமுதன், கூடப்பாக்கத்தை சேர்ந்த அன்பு என்கிற அன்பரசன், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் உடனடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த மணிபாலன், சார்லஸ், கவியரசு, வழுதாவூரை சேர்ந்த ஜெகன் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சாம்பசிவம் கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சாம்பசிவத்தை கொல்ல உளவு பார்த்த பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் என்ற பாரதி (33) மற்றும் வெடிகுண்டு தயாரிக்க உதவிய அபிஷேகப் பாக்கத்தை சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார் மற்றும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அதே பகுதியை சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார், அபிஷேகப்பாக்கம் புது நகரை சேர்ந்த வீரசெல்வன் என்கிற விஜய் (26), விஜய சாரதி என்ற வர்மா (20), செல்வம் (28) ஆகிய 5 பேரை காலாப்பட்டு பகுதியில் பதுங்கி இருந்த போது கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் கைது செய்தனர்.

Tags:    

Similar News