செய்திகள்
திருமணம் செய்த காதல் ஜோடி

திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2020-02-07 09:32 GMT   |   Update On 2020-02-07 09:32 GMT
காதல் திருமணம் செய்த ஜோடி இரு வீட்டு பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த சக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப். தனியார் நிறுவன ஊழியர். இவரும், வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியை சேர்ந்த நர்மதா என்பவரும் ஒரே கல்லூரியில் படித்தபோது காதலித்தனர்.

வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நர்மதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியான ஜோசப்-நர்மதா ஆகிய இருவரும் கடந்த 5-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே நர்மதா கடத்தப்பட்டுவிட்டதாக அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் காதல் திருமணம் செய்த ஜோசப்பும், நர்மதாவும் இரு வீட்டு பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று கருதினர். அவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News