செய்திகள்
தமிழக அரசு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Published On 2020-01-23 17:24 GMT   |   Update On 2020-01-24 02:59 GMT
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பிறகு “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ரேசன் பொருட்களுக்காக முகவரியை மாற்றி கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
 
நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2020-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, புத்தாண்டு தினமான கடந்த 1-ம் தேதி 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News