செய்திகள்
கோப்புப்படம்

நெசப்பாக்கத்தில் அழகு நிலைய பெண் ஊழியரிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

Published On 2020-01-18 09:00 GMT   |   Update On 2020-01-18 09:00 GMT
சென்னை நெசப்பாக்கத்தில் அழகு நிலைய பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி 5 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (29). அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது சகோதரி சத்யாவுடன் மொபட்டில் வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நெசப்பாக்கம் ஏரிக்கரை தெரு அருகே வந்தபோது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் தமிழ்ச்செல்வியை வழிமறித்தனர்.

தமிழ்செல்வியை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியை அடுத்த பாலவேடு காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜா. ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி எழிலரசி (வயது 55).

இவர் வண்டலூர் மீஞ்சூர் 400 அடி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று வண்டியை நிறுத்தினர். அதில் ஒரு வாலிபர் நடந்து சென்று எழிலரசி கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை அறுத்துள்ளார்.

அப்போது எழிலரசி செயினை கையில் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து கையில் கிடைத்த ஒன்றரை சவரன் செயினுடன் மர்மநபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

இதுகுறித்து எழிலரசி முத்தாபுதுபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News