செய்திகள்
டெங்கு காய்ச்சல்

மதுரையில் 379 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

Published On 2019-12-28 06:28 GMT   |   Update On 2019-12-28 06:28 GMT
மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு மட்டும் 379 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இது கடந்த ஆண்டை விட 5 மடங்கு அதிகம்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

சுகாதாரத்துறை பதிவேடுகளின் புள்ளி விவர பட்டியலின்படி “மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு மட்டும் 379 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இது கடந்த ஆண்டை விட 5 மடங்கு அதிகம்.

அதிலும் குறிப்பாக மதுரை மாநகராட்சியில் மட்டும் 179 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு 29 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் நடப்பாண்டு 225 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை தரப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் தான் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய விவரம் தெரியவந்தது.

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் காய்ச்சலுக்கு எவரும் பலியாகவில்லை என்பது தான் ஒரே ஆறுதல்.

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்தாண்டு 73 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இதில் பலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முன் கூட்டியே கண்டறிந்து தடுக்கும் பணியில் சுகாதாரத்துறை மும்முரமாக களம் இறங்கியது.

இதன் ஒரு பகுதியாக சுகாதார அதிகாரிகள் அடங்கிய 39 மொபைல் டீம் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு போர்க்கால வேகத்தில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இது தவிர அந்தப்பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. இருந்த போதிலும் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை சீசன் தொடர்ச்சியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கொசுக்களின் உற்பத்தி பெருகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது என்றனர்.

Tags:    

Similar News