செய்திகள்
மோப்ப நாய் அர்ஜூன்

நகை கொள்ளையடித்த வாலிபரை காட்டிக்கொடுத்த மோப்பநாய்

Published On 2019-12-26 08:51 GMT   |   Update On 2019-12-26 08:51 GMT
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் நகையை கொள்ளையடித்த அரும்பாக்கத்தை சேர்ந்த வாலிபரை மோப்ப நாயின் உதவியால் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை ஐஸ்அவுஸ் அசத்தி முத்தன் தெருவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.

மதியம் 12 மணிக்கு வெளியில் சென்ற அவர் 2.30 மணிக்கு திரும்பி வந்தார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.5ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

வெளியில் இருந்த சாவியை எடுத்து யாரோ கைவரிசையை காட்டி இருந்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் தேஸ்முக் சேகர் சஞ்சய், உதவி கமி‌ஷனர் பாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.

அது கொள்ளை நடைபெற்ற வீட்டின் அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்குள் புகுந்து வெளியில் ஓடி வந்தது.

இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தனர்.

இதில் அரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபர் அவரது வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் வீடு புகுந்து பணம்-நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

கொள்ளை சம்பவம் நடந்து 3மணி நேரத்தில் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கினர். இதையடுத்து தனிப்படையினரை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
Tags:    

Similar News