செய்திகள்
ஆண்டிப்பட்டி-க.விலக்கு இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் அகல ரெயில் பாதை பணி

Published On 2019-12-23 18:15 GMT   |   Update On 2019-12-23 18:15 GMT
ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் மதுரை-போடி அகல ரெயில்பாதை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், குறித்த காலத்தில் திட்டப்பணிகள் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:

மதுரை-போடி இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை இருந்தது. இந்த மீட்டர்கேஜ் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து மீட்டர்கேஜ் பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து மதுரை-போடி இடையே அகலப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் அகல ெரயில் பாதை திட்டத்திற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் ெரயில்வே பட்ஜெட்டில் மதுரை-போடி அகல ெரயில் பாதை திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அகல ெரயில் பாதை திட்டப்பணிகள் தீவிரபடுத்தப்பட்டது. ெரயில்வே வழித்தடம், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக மதுரை முதல் உசிலம்பட்டி வரையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ெரயில் என்ஜின், சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தமாக நடக்கிறது. குறிப்பாக மதுரை-தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் ெரயில் பாதைக்காக சுமார் 625 மீட்டர் தூரம் மலையை உடைத்து அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் போடி-மதுரை அகல ெரயில்பாதை திட்டம் நிறைவேறுவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே கணவாய் மலையை உடைத்து அகலப்படுத்தி அகல ெரயில்பாதை திட்ட பணியை விரைந்து முடிக்க ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News