செய்திகள்
விபத்து

கோவையில் லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2019-12-22 16:13 GMT   |   Update On 2019-12-22 16:13 GMT
கோவையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளைபட்டிணத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகன் இம்ரான்கான் (வயது 19). இவர் கேரள மாநிலம் வேளந்தாவலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இவர் அதே கல்லூரியில் படிக்கும் நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை சேர்ந்த ஆனந்த் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வந்தார். பின்னர் 2 பேரும் கல்லூரிக்கு திரும்பினர்.

மோட்டார் சைக்கிளை ஆனந்த் ஓட்டி சென்றார். மோட்டார் சைக்கிள் ஆத்துப்பாலம் மின் மயானம் அருகே சென்ற போது ஆனந்த் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

அப்போது லாரியின் சக்கம் இம்ரான்கான் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவஇடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஆனந்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இந்த தகவல் கிடைத்ததும் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு வரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பரிதாபமாக இறந்த இம்ரான்கானின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News