செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஆட்கொணர்வு வழக்கு- நித்யானந்தாவுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2019-12-20 06:43 GMT   |   Update On 2019-12-20 06:43 GMT
பிடதி ஆசிரமத்தில் பல் மருத்துவர் சிறைவைக்கப்பட்டிருப்பதாக கூறி தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த ஐகோர்ட், சாமியார் நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை:

சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடத்தல், பாலியல் வழக்குகளை தொடர்ந்து அவரது ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களது குழந்தைகளை மீட்டுத்தர கோரி பெற்றோர் தரப்பில் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்படுகின்றன. 

அவ்வகையில் ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த அங்கம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தன் மகன் பிராணாசாமியை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா மற்றும் ஈரோடு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 4 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News