செய்திகள்
கோப்பு படம்

தென்னை மரத்துக்கு ஊற்ற டானிக் கடத்தல் - திருப்பூர் மாநகராட்சி ஆஸ்பத்திரி பணி நீக்கம்

Published On 2019-12-09 10:07 GMT   |   Update On 2019-12-09 10:07 GMT
திருப்பூர் அருகே தென்னை மரத்துக்கு ஊற்றுவதற்காக டானிக் கடத்திய மாநகராட்சி மருத்துவமனை பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டனில் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நேற்று காலை மருந்துபாட்டில் அடங்கிய 2 பெட்டிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளியில் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மருந்தாளுனர் தனலட்சுமியிடம் பொதுமக்கள் கேட்டபோது வாவிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அதில் மருந்து பெட்டிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

சந்தேகம் தீராத பொதுமக்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அவர் குறிப்பிட்ட வாவிபாளையத்துக்கு செல்லாமல் மாற்று வழியில் பூலுவபட்டிக்கு செல்ல முயன்றார்.

அங்கேரிபாளையம் அருகே செட்டிபாளையம் பிரிவில் மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து கேட்டபோது இது இது காலாவதி மருந்து தான். தென்னை மரத்துக்கு ஊற்ற எடுத்து செல்கிறேன் என்றார். இதனையடுத்து அவரை பிடித்துஅனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜன் விசாரணை நடத்தினார். விசாரணையில் மருந்து கடத்தியவர்கோவையைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 50) திருப்பூர் பனியன் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. பெட்டியில் இருந்தவை கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படக்கூடிய, 100 மி.லி., அளவுள்ள, 200 ஊட்டச்சத்து டானிக் பாட்டில்கள் என்பதும் தெரிந்தது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட நகர் நல அலுவலர் பூபதியிடம் கேட்டபோது மருந்து கடத்திய தனலட்சுமி தற்காலிக பணியாளர். மருந்து கடத்தல் குறித்து தெரிந்ததும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மேலும் மருந்து பாட்டில்களை எவ்வளவுக்கு விற்பனை செய்தார் என்பது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.
Tags:    

Similar News