செய்திகள்
தற்கொலை

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை

Published On 2019-11-29 13:52 GMT   |   Update On 2019-11-29 13:52 GMT
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்:

திருமங்கலத்தை அடுத்த மேலக்கால் அருகேயுள்ள கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு காலில் புண் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 20-ந் தேதி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் புண் குணமாக வில்லை.

இதனால் மனவேதனை அடைந்த கண்ணன் இன்று காலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News