செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது

Published On 2019-11-27 08:57 GMT   |   Update On 2019-11-27 08:57 GMT
ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 7 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 7 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து குறைந்து 7 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பரிசல் இயக்க அனுமதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர் வந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தற்போது நீர்வரத்து மிகவும் குறைந்துவிட்டதால் தண்ணீர் வாய்க்காலில் செல்வதுபோல் செல்கிறது.

Tags:    

Similar News