செய்திகள்
பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

Published On 2019-11-20 10:02 GMT   |   Update On 2019-11-20 10:02 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று பகலில் இருந்து இரவு வரை விட்டு விட்டு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக பாளை மற்றும் கருப்பாநதி அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கடலோர பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1274 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 132.75 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 146.91 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 211 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 69.15 அடியாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாளை-11, கருப்பாநதி-11, நெல்லை-6, பாபநாசம்-6, சங்கரன்கோவில்-6, தென்காசி-5, குண்டாறு-5, அடவிநயினார்-5, ஆய்க்குடி-4.8, கடனாநதி-3, செங்கோட்டை-2, அம்பை-1, மணிமுத்தாறு-1

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

விளாத்திகுளம்-41, ஓட்டப்பிடாரம்-38, காயல் பட்டினம்-25, கடம்பூர்-25, எட்டயபுரம்-19, வைப்பார் -12, வேடநத்தம்-12, திருச் செந்தூர்-10, காடல்குடி-8, கழுகுமலை-8, மணியாச்சி-6, ஸ்ரீவைகுண்டம்-6, சூரங்குடி-6, தூத்துக்குடி-1.2, கோவில்பட்டி-1, கீழ அரசடி-1

Tags:    

Similar News