செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-11-15 10:12 GMT   |   Update On 2019-11-15 10:12 GMT
நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.
கூடலூர்:

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 66 அடி வரை உயர்ந்ததால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மதுரை நகருக்குள் தற்போது சீறிப்பாய்ந்து செல்கிறது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதாலும் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாலும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று காலை வரை 4090 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2768 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 59.19 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1210 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 3454 மி.கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீர் மட்டம் 126.25 அடியாக உள்ளது. வரத்து 595 கன அடி. திறப்பு 1490 கன அடி. இருப்பு 3888 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.20 அடியாக உள்ளது. வரத்து 31 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.44 அடி. அணைக்கு வரும் 78 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

தேக்கடி 1.6, வீரபாண்டி 2.2, வைகை அணை 1.8, மஞ்சளாறு அணை 7, சோத்துப்பாறை 30, கொடைக்கானல் 30.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News