செய்திகள்
ஏலக்காய்

போடியில் ஒரு கிலோ ஏலக்காய் ரூ.2500க்கு விற்பனை

Published On 2019-11-01 10:22 GMT   |   Update On 2019-11-01 10:22 GMT
போடி முந்தல் சாலையிலுள்ள இந்திய நறுமண வாரியத்தின் சார்பில் நடைபெற்ற ஏலக்காய் ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.2500 க்கு விற்பனையானது.
போடி:

தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏலக்காய் தோட்டங்களில் விளைச்சல் இல்லாததால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைவாக உள்ளது. இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏலம் நடத்தப்படுகிறது.

இங்கு வழக்கமாக நாளொன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்ய ப்பட்டு ஏலம் நடைபெறும். ஏலக்காய் வரத்து குறையத் தொடங்கியதை அடுத்து விற்பனை விலையும் சீராக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏலக்காய் விலை சராசரி தரம் கிலோ ரூ.1,325.50 ஆகவும், உயர் தரம் கிலோ ரூ.1,609 ஆகவும் இருந்தது. தற்போது பருவமழை காரணமாக ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது.

இதனால் விலை அதிகரித்துள்ளது. போடி முந்தல் சாலையிலுள்ள இந்திய நறுமண வாரியத்தின் சார்பில் நடைபெற்ற ஏலக்காய் ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.2500 க்கு விற்பனையானது. சராசரி விலை ஒரு கிலோ ரூ.2,400 க்கு விற்பனை ஆனது. ஏலத்தில் மொத்தம் 25 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News