என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cardamom"

    • ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.
    • மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்.

    இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

    செரிமானத்திற்கு உதவும்

    ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டக்கூடியது. வயிறு வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கக்கூடியது. இரவு உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.

    சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்

    ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும். வாய் சுகாதாரத்தை பராமரிக்க செயற்கை புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் அல்லது சூயிங்கம் உபயோகிப்பதற்கு இயற்கையான மாற்றாக ஏலக்காய் அமையும்.

    தூக்கத்தை ஊக்குவிக்கும்

    ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். தூக்க தரத்தை மேம்படுத்துவதற்கும், அமைதியான இரவிற்கும் பங்களிக்கும்.

    நச்சுகளை வெளியேற்றும்

    ஏலக்காயில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் துணைபுரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமும், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும்.

    ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்

    ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த பொருளான ஏலக்காய், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோயாளிகள் அல்லது குளுக்கோஸ் அளவை நிலையாக பராமரிக்க விரும்புவோருக்கு நன்மை பயக்கும்.

    நெஞ்செரிச்சலை குறைக்கும்

    ஏலக்காயில் இருக்கும் காரத்தன்மை வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவும். அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை குறைக்கும். குறிப்பாக இரவு உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் அசவுகரியத்தில் இருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும். தொண்டையில் சளி படிவதையும் தடுக்கும். தொண்டை புண்ணை ஆற்றும். இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கஷ்டங்களை தடுப்பதிலும் பயனுள்ளதாக அமையும்.

    வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

    வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, கலோரி எரிப்பை ஊக்குவிக்கும் ஆற்றலும் ஏலக்காய்க்கு உண்டு. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவிடும்.

    • ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52 ) ஏலக்காய் வியாபாரி. இவர் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை எண்ணி மிகவும் வேதனை அடைந்த அருண்குமார் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழப்பதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது மனைவி கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும்.
    • வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும்.

    மர வகையை சேர்ந்தது இலந்தை மரம். கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை 9 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழம் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதன் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

    இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.

    இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும்.

    இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.

    உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

    பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

    பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தை பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

    • 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
    • ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.

    அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.

    இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.

    போடியில் ஏலக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    போடி:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏலக்காய் விளைவிக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் தேனி மாவட்டம் போடி முந்தல் சாலையில் உள்ள இந்திய நறுமணப்பொருட்கள் வாரியத்தில் ஏலம் எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு நடந்த ஏலத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிபோட்டு ஏலக்காயை வாங்கினர்.

    அதிகபட்சமாக ஒருகிலோ ரூ.2025-க்கு விற்பனையானது. நடுத்தரவகை ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1500 வரை விலைபோனது. தற்போது ஏலத்தோட்டங்களில் காய்கள் இல்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது.

    மேலும் சில வியாபாரிகள் அதிகவிலை கிடைப்பதற்காக ஏலக்காய்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் இருப்பு ஏலக்காய் வைத்து ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே விலை ஏற்றத்தால் பயன்படுகிறார்கள். விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை.

    ×