ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை

ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52 ) ஏலக்காய் வியாபாரி. இவர் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை எண்ணி மிகவும் வேதனை அடைந்த அருண்குமார் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழப்பதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி அவரது மனைவி கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com