செய்திகள்
புகார்

கோவை வாலிபர் மீது கத்தார் விமான நிலைய பெண் என்ஜினீயர் புகார்

Published On 2019-10-29 11:54 GMT   |   Update On 2019-10-29 11:54 GMT
உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய கோவை வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கத்தார் விமான நிலைய என்ஜினீயர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் நிதிபாண்டே (வயது 31). இவர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் என்ஜினீயராக உள்ளேன்.

இதே விமான நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்த கோவை வீரகேரளம் தென்றல் நகரை சேர்ந்த லட்சுமி நாராயணன் (31) என்பவர் எனக்கு பழக்கமானார்.

இருவரும் காதலித்தோம். அதன்பின்னர் மருதமலை, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றோம். நெருக்கம் அதிகரிக்க ஒரு கட்டத்தில் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். கணவர் ஆகப்போகிறவர் தானே என்று நானும் அதற்கு சம்மதித்தேன்.

இந்நிலையில் எங்கள் காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இரு வீட்டாரும் சந்தித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே லட்சுமி நாராயணன் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. ஒரு கட்டத்தில் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன். இது தவிர அவர் வேறு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.

காதலித்து ஏமாற்றிய லட்சுமி நாராயணனின் மீது நடவடிக்கை எடுக்க வடவள்ளி போலீஸ், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் மற்றும் மகளிர் ஆணைத்தில் புகார் அளித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்வில்லை.

எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து லட்சுமி நாராயணன் என்னை திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News