செய்திகள்
தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் சரிந்தது

Published On 2019-10-29 10:28 GMT   |   Update On 2019-10-29 10:28 GMT
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 256 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை:

இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த மாத துவக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை 29 ஆயிரத்திற்கு கீழ் குறையவில்லை.

நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.29 ஆயிரத்து 480 என்ற நிலையில் இருந்தது. ஒரு கிராம் 3685 ரூபாயாக இருந்தது. 

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 224 ரூபாய் என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3653-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் நிலவரப்படி சற்று உயர்ந்து, ஒரு சவரன் 29312 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் ரூ.3664 ஆக இருந்தது.

இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 30  ஆயிரத்து 616 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3827 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 

வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் சரிந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.49 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை ஆனது. 
Tags:    

Similar News