செய்திகள்
பனை விதைகள்

பூண்டி ஏரியை பலப்படுத்த 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

Published On 2019-10-25 07:34 GMT   |   Update On 2019-10-25 07:34 GMT
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியை பலப்படுத்த 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கியது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. ஏரியின் நீர்வரத்து பரப்பளவு 760 சதுர மைல் ஆகும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியின் கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு உதவ தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் முன்வந்து உள்ளனர். பனை மரத்தின் வேர்கள் அதிக திறன் கொண்டவை. இதனால் பூண்டி ஏரியை சுற்றி பனை விதைகள் நட முடிவு செய்தனர்.

இதையடுத்து பூண்டி ஏரியை சுற்றி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரத்து கால்வாய் நெடுகிலும் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நேற்று தொடங்கியது. இதில் தோட்டக்கலைத் துறை துணை திட்ட இயக்குனர் கருப்பையா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் பங்கேற்றனர்.


Tags:    

Similar News