செய்திகள்
ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-23 13:53 GMT   |   Update On 2019-10-23 13:53 GMT
அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:

விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,பயிர் இன் சூரன்ஸ் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகளிடம் நேரடியாக வழங்க வேண்டும், 201718ல் குறிப் பிட்ட விவசாயிகளுக்கு இன்சுரன்ஸ் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு பட்டா ,சிட்டா இதர சான்றுகள் கேட்பதை கைவிட வேண்டும், பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளின் நெல்லை விரைந்து கொள்முதல் செய்திடவும், ஈரப்பதத்தை காரணம் காட்டாமலும் கொள்முதல் செய்ய வேண்டும், பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் உரிய இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பால சுந்தரம் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News