search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் கடன்"

    • ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில்ன பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் பயிர் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கும் கூடுதலாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி பயிர் கடன்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

    பயிர் கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் கலெக்டர், இணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை எந்தியரமயமாக்கல் திட்டம் 2023-24-ன் கீழ் மானிய விலையில் பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழா திருப்பத்தூர், மானாமதுரையில் நடைபெறுகிறது.

    அதில் திருப்பத்தூரில் நடைபெறும் விழாவின் மூலம் 68 விவசாயி களுக்கும் மானாமதுரையில் நடைபெறும் விழாவின் மூலம் 77 விவசாயிகளுக்கும் என மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மொத்தம் ரூ.3 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீ்ட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் சிறு விவசாயி களுக்கு ரூ.85 ஆயிரம் மானியத்தொகையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் மானிய தொகையும் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த விவசாயி களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மானியத்தொகையும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில்இ திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக்கல்லூரி அறிவிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடி கிராமத்திற்கு வருகைதந்த பா.ம.க. தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை 950 மி.மீ, அதில் ஒரே நாளில் சீர்காழியில் 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தமிழ்நாட்டில் பெய்யும் பெரும் அளவு மழை நீர் வடிகாலாக மயிலாடுதுறை மாவட்டம் விளங்குகிறது.

    சரிவர தூர்வாரமல் உள்ளதே இதற்கு காரணமாகும். இதனை உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்ட மாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

    நாங்கள் எந்த கட்சியிலும் கூட்டணியில் இல்லை.மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக் கல்லூரி அறிவிக்க வேண்டும்.

    ஆன்லைன் விளையா ட்டால் தமிழகத்தில் மேற்கொண்டு உயிரிழ ப்புகள் ஏற்பட்டால்அதற்கு கோப்புகளில் கையெழுத்துயிடாத தமிழக ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.

    2026 ஆம் ஆண்டு பா.ம.க தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்.அதற்கு ஏற்றார் போல் 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும்.

    இட ஒதுக்கீட்டை நூறு விழுக்காடாக ஆக்க வேண்டும், அனைத்து சமுதாயத்திற்கும் சரிசமமாக இட ஒதுக்கீடு பிரித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, லன்டன் அன்பழகன், நல்லத்துக்குடி காமராஜ், உள்ளிட்ட முக்கிய பொருப்பாளர்கள் திரளாக கலந்துக் கொன்டனர்.

    • இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.

    டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

    அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.300 கோடி குறியீடு செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடமாடும் வாகன வங்கி சேவையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் உர ஆய்வாளர்கள், உர உற்பத்தியாளர்கள், தொடக்க வேளாண் கடன் சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி, வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார்.

    அப்ேபாது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டம், பின் தங்கிய மாவட்டம் என சொல்லி வந்த நிலையை மாற்றி கடந்த காலங்களில் வேளாண்மைத் துறையின் மூலமும், கூட்டுறவுத் துறையின் மூலமும் பல்வேறு திட்டங்களை வழங்கி இன்றைய காலத்தில் விவசாயிகள் பல்வேறு தொழில் நுட்பங்களுடன் சிறந்த முறையில் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் மேலும் விவசாய பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகள் பெற்று பயன்பெறவும் ரூ.300 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    வேளாண்மைத்துறை அலுவலர்கள் வட்டார அளவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்களை வழங்கி ஒதுக்கீடு பெறப்பட்ட ரூ.300 கோடி விவசாயிகளுக்கு சென்றடைந்தன என்பதை கூட்டுறவுத்துறையும், வேளாண்மைத்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கிராமப் பகுதியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடமாடும் வாகன வங்கி சேவையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    ×